பேஸ்புக் எடுத்த அதிரடி முடிவு!! 58 ஆயிரம் கணக்குகளுக்கு ஆப்பு

Report
82Shares

பேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பரப்புரை நிறுவனத்திடம் பகிரப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 3 மாதங்களில் மட்டும் 58.3 கோடி போலி பேஸ்புக் கணக்குகள் மூடப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 3.4 மில்லியன் தவறான புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் என்று எவரும் இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்தளவுக்கு பேஸ்புக் மக்கள் மத்தியில் கலந்துள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் பேஸ்புக் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. பேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பரப்புரை நிறுவனத்திடம் பகிரப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பேஸ்புக் வலைத்தளத்தில் வன்முறைகளை தூண்டும், ஆபாச படங்கள் மற்றும் பயங்கரவாத கருத்துகளை வெளியிடும் முகநூல் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது. போலி பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

4398 total views