டுவிட்டரின் புதிய அம்சம் - முதற்கட்டமாக கனடாவில்

Report

டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதில்களை மறைக்கச் செய்யும் புதிய ஹைட் ரிப்ளைஸ் (hide replies) எனும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அம்சம் முதற்கட்டமாக கனடாவில் வழங்கப்பட்டுள்ள நிலையில், கனடாவை தொடர்ந்து ஏனைய நாடுகளிலும் இந்த அம்சம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

புதிய அம்சம் கொண்டு பயனர்கள் எதிர்மறை கருத்துக்களை மற்றவர்கள் பார்க்காதபடி மறைக்கச் செய்ய முடியும் எனினும் மறைக்கப்பட்ட பதில்களை புதிய ஐகானை க்ளிக் செய்து ஃபாளோவர்கள் மட்டும் பார்க்க முடியும்.

இந்த அம்சம் கொண்டு டுவிட்டர் தளத்தில் ஆரோக்கியமான உரையாடல்களுக்கு வழிசெய்யும்.

புதிய அம்சம் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே Android தளத்தில் புதிய அம்சம் சிறிது நேரத்திற்கு செயலிழக்கச் செய்யப்படுவதாக டுவிட்டர் தெரிவித்தது.

இதேவேளை ஏனைய நாடுகளில் இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

தற்சமயம் சோதனையிலிருக்கும் இந்த அம்சம், சோதனையில் பெறும் விமர்சனங்களுக்கு ஏற்ப ஏனைய பகுதிகளில் வெளியிடுவது பற்றிய முடிவு எட்டப்படும் எனவும் தெரியவருகின்றது.

சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் மற்றும் எதிர்மறை தகவல்கள் பரவிவருகின்றது.

இதனை எதிர்கொள்ள பல்வேறு நிறுவனங்களும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்ற நிலையில், டுவிட்டர் நிறுவனம் இந்த புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

695 total views