வாட்ஸ் அப்பில் வந்துவிட்டது புதிய அப்டேட்! பயனாளர்கள் குஷி

Report

ஸ்மார்ட்போன், உலகத்தையே உள்ளங்கையில் அடக்கிவிட்டது என்றால், உரையாடல்களை விரல் நுனியில் சுருக்கிவிட்டது வாட்ஸ் அப்.

இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் பல்வேறு புதிய அப்டேட்ஸ்களை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

வாட்ஸ் அப் செயலியில் டார்க் மோட் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் இந்த வசதி கிடைக்கும்.

டார்க் மோடில் Interface ஒளி குறைந்த நிலையில் கறுப்பாக இருக்கும். திரையின் வெளிச்சம் கண்களுக்கு கூச்சத்தை தராது. இதற்கான முயற்சியில் வாட்ஸ் அப் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தானியங்கு விதத்திலும் குறித்த நேரத்துக்கு டார்ப் மோடுக்கு மாறிக்கொள்ளும்படியான வசதியையும் வாட்ஸ் அப் நிறுவனம் தந்துள்ளது.

பீட்டா பயனராக இருந்திருந்தால் மட்டுமே இப்போதைக்கு இந்த பயன்முறையை நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் செயலியில் பெற முடியும். இதைப் பெற விரும்பினால், Google Play Store இல் இருந்து செயலியின் அப்டேட்ஸ் பகுதியைப் பாருங்கள்.

ஆன்ட்ராய்டு பயனராக இருந்தும், இதை முயற்சிக்க காத்திருக்க முடியாவிட்டால், நீங்கள் பீட்டா சோதனையாளராக பதிவு செய்துகொண்டு இதை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

முதலில் புதுப்பிக்கப்பட்டதும், பயன்பாட்டைத் திறந்து வாட்ஸ்அப் அமைப்புகளுக்குச் (செட்டிங்ஸ்) செல்லவும். அமைப்புகளின் கீழ் அரட்டைக்குச் (Chat) செல்லுங்கள்.

உங்கள் விருப்பத்தைப் பொறுத்து இருண்ட அல்லது ஒளி கருப்பொருளைத் (Dark or Light theme) தேர்ந்தெடுக்கக்கூடிய ‘தீம்’ (theme) என பெயரிடப்பட்ட புதிய விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள்.

சாதனத்தின் கருப்பொருளைப் பொறுத்து கருப்பொருளை மாற்றும் ‘கணினி விருப்பம்’ (System Preference) என பெயரிடப்பட்ட மூன்றாவது விருப்பம் இருந்தாலும் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் தேர்வு செய்து கொள்ளலாம்.

சமீபத்திய ஆண்ட்ராய்டு வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷன் 2.20.14 அப்டேட்டின் படி, டார்க் மோட் தீம் சோதனையை தொடர்ந்து, புதியதாக மூன்று மாற்றங்களுக்கான சோதனைகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

அனிமேஷன் ஸ்டிக்கர், டெலிட் மெசேஜஸ் மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கான ஐ-க்லவுட் கீ-செயின் போன்ற 3 அம்சங்கள், பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

2338 total views