தாத்தாவின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமி

Report
223Shares

பிரித்தானியாவில் மாரடைப்பு ஏற்பட்ட தன் தாத்தாவைக் கண்டு பயந்து அலறாமல் மருத்துவ உதவியாளர்களை அழைத்த சிறுமி தலைப்புச் செய்தியாகியிருக்கிறாள்.

70 வயதான Leonard Lichtveldக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது, அவரது மருமகனான Tom அவருக்கு முதலுதவி அளித்துக்கொண்டே அவசர உதவி மையத்திற்கு தகவலளித்திருக்கிறார்.

அந்த நேரத்தில் Tomஇன் மகளான Lily தனது தந்தைக்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கிறாள்.

பெரியவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் பயந்து அலறும் குழந்தைகளுக்கிடையே அவள் தன் தம்பியை தொலைவில் அழைத்து சென்று பத்திரமாக அமர வைத்து விட்டு வந்துள்ளார்.

தன் தந்தையின் சொல்படி, வீட்டு சாவியைத் தேடி எடுத்து கதவைத் திறந்து வெளியில் அப்போதுதான் வந்த மருத்துவ உதவியாளர்களை வரவேற்று உள்ளே அழைத்து வந்திருக்கிறாள்.

அவர்கள் Leonardஐ மீட்டு ஆம்புலன்சில் பத்திரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

உடல் நலமடைந்த அவர் தனது மகளுக்கு ஏப்ரல் மாதம் திருமணம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தனக்கு சரியான நேரத்தில் உதவிய தனது பேத்திக்கும் மருத்துவ உதவியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

Lilyக்கும் அவளது குட்டித்தம்பி Georgeக்கும் தங்கள் தாத்தாவைக் காப்பாற்றியதற்காக Laverick bravery award என்னும் வீரத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

9566 total views