இங்கிலாந்து: பிரெக்ஸிற் நாடாளுமன்ற வாக்கெடுப்பு திகதி அறிவிப்பு! - ஐரோப்பிய சுங்க ஒன்றியத்தில் நாம் தங்கியிருக்கமுடியாது

Report

பிரதமர் தெரேசா மே-யினால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரெக்ஸிற் மாற்றுத்திட்டத்தின் மீதான நாடாளுமன்ற விவாதமும் வாக்கெடுப்பும் ஜனவரி 29 ஆம் திகதி இடம்பெறுமென அமைச்சரவை தலைவர் ஆண்ட்ரியா லீட்சம் தெரிவித்துள்ளார்.

பிரதமரால் முன்வைக்கப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டதையடுத்து பிரதமர் மாற்றுத்திட்டமொன்றை சமர்ப்பிக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

வரும் திங்கட்கிழமை அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான தனது முன்மொழிவை பிரதமர் வெளியிடுவாரெனவும் ஆண்ட்ரியா லீட்சம் தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை ஒப்புக்கொணடால் ஜனவரி 29 ஆம் திகதி பிரதமரின் முன்மொழிவு மீதான விவாதம் நடத்தப்படுமென ஆண்ட்ரியா லீட்சம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்க ஒன்றியத்தில் நாம் தங்கியிருக்கமுடியாது: பிரண்டன் லூயிஸ்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய சுங்க ஒன்றியத்தில் பிரித்தானியா தங்கியிருப்பது சாத்தியமற்றது ஏனெனில் பிரெக்ஸிற்றின் பின்னர் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை முன்னெடுத்துச் செல்வதே முன்னுரிமையானது என கொன்சர்வேட்டிவ் கட்சிகுழுவின் (chairman) தலைவர் பிரண்டன் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

சமரச பிரெக்ஸிற் திட்டமொன்றை கண்டுபிடிக்கும் நோக்குடன் அரசாங்கத்தின் சிரேஷ்டஉறுப்பினர்களுடனும் அமைச்சரவை உறுப்பினர்களுடனும் இன்று ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் சுங்க ஒன்றியத்தில் தங்கியிருப்பதையும் பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படுவதையும் அவர் நிராகரித்துள்ளார்.

உலகளாவியரீதியில் வர்த்தகம் செய்வதற்கு நாம் சுயாதீனமான வணிகக்கொள்கை ஒன்றை கொண்டிருக்கவேண்டும். சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை சுதந்திரமாக மேற்கொள்ள வேண்டுமென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்க ஒன்றியத்தில் நாம் தங்கியிருக்க முடியாது என பிரண்டன் லூயிஸ் தெரிவித்தார்.

10675 total views