புதிய அரண்மனைக்கு செல்லும் பிரித்தானிய இளவரசர் மற்றும் அவரது மனைவி!

Report

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் சசெக்ஸ் மனைவி மேகன் இருவரும் பக்கிங்ஹாமில் அமைந்துள்ள புதிய அரண்மனைக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல், நேற்று (வியாழக்கிழமை) அரச குடும்பம் அறிவித்துள்ளது. பிரித்தானிய மஹாராணி எலிசபெத் அனுமதி வழங்கிய நிலையில் இவ்விருவரும் புது அரண்மனைக்கு செல்கின்றனர்.

கடந்த மே மாதம் இளவரசர் ஹரி மேகன் மார்க்கலை மணம் முடித்த நிலையில் இருவரும் இளவரசர் வில்லியம்ஸ், கேட் தம்பதியருடன் இணைந்து கென்சிங்டன் அரண்மனையில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், ஹரியின் மனைவி மேகன் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், குழந்தை பிறகும் முன்பு இவ்விருவரும் புதிய அரண்மனைக்கு செல்ல உள்ளனர்.

பிரித்தானிய அரச குடும்ப தம்பதியரிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக முன்னதாக பிரித்தானிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும் அது தொடர்பில் அரச குடும்பம் பகிரங்கமாக எந்த விடயத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

7616 total views