நாளையுடன் முடிவுக்கு வரும் ஆர்ப்பாட்டங்கள்!

Report

ஒருவார காலத்துக்கும் மேலாக மத்திய லண்டனில் முன்னெடுக்கப்பட்டு வந்த காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாளையுடன் முடிவுக்குவருமென ஆர்ப்பாட்ட ஏற்பட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

எஸ்ரிங்க்ஷன் ரெபல்லியன் (Extinction Rebellion) குழுவினால் கடந்த 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக இதுவரை 1000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமது ஆர்ப்பாட்டங்களை கைவிட்டாலும் உலகம் முழுதும் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை தாம் ஏற்படுத்தியுள்ளதாக எஸ்ரிங்க்ஷன் ரெபல்லியன் (Extinction Rebellion) குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமது ஆர்ப்பாட்டங்கள் விளைவாக மக்களது வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதை தாம் அறிவோம் எனவும் ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்கள் கட்டாயமாகத் தேவை என்பதாலேயே முன்னெடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்குள் பசுமையில்ல வாயு உமிழ்வுகளை நிகர பூஜ்ஜியமாக குறைத்தல், காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அவசர நிலையை அறிவித்தல், காலநிலை மாற்றம் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு பொதுமக்கள் அடங்கிய சட்டமன்றம் ஒன்றை உருவாக்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

1169 total views