மறைந்த இளவரசி டயானாவின் பணிகளை முன்னெடுக்க தயாராகும் இளவரசர் ஹரி

Report

மறைந்த இளவரசி டயானா விட்டுச் சென்ற பணிகளை மீண்டும் முன்னெடுப்பதற்காக இளவசர் ஹரி ஆபிரிக்க நாடுகளுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்ணி வெடிகள் எவ்வளவு ஆபத்தானவை என காட்டுவதற்காக சர்வதேச ஊடகவியலாளர்கள் முன் ஆபிரிக்க நாடு ஒன்றில் கண்ணி வெடி ஒன்றை மறைந்த இளவரசி டயானா வெடிக்கச் செய்து காட்டி உலகின் கவனம் ஈர்த்திருந்தார்.

அத்துடன், கண்ணிவெடிகளை அகற்றும் நோக்கில் HALO Trust என்ற தொண்டு நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்து பணியாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் கார் விபத் தொன்றில் உயிரிழந்தார்.

இந்தநிலையில் தற்போது தனது தாய் விட்டுச் சென்ற குறித்த தொண்டு நிறுவனத்தின் பணிகளை தொடர்வதற்காக ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஹரி பயணிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

தனது மனைவி மேகன், மகன் குட்டி இளவரசர் ஆர்ச்சி ஆகியோரையும் அவர் தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்துள்ள நிலையில், இந்த பயணம் குட்டி இளவரசருக்கும் மேகனுக்கும் பாதுகாப்பானதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

577 total views