பிரித்தானியாவில் ஆண் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல்! வியந்து பாராட்டிய பல பெண்கள்

Report

பிரித்தானியாவில் ஆண் ஒருவர் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Huddersfield நகரை சேர்ந்தவர் பென் கார்ப்பெண்டர் (35). இவருக்கு மனவளர்ச்சியால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம்.

இதற்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் பென் கடந்த 9 ஆண்டுகளாக 4 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அண்மையில் பென் ஐந்தாவதாக ஒரு குழந்தையை தத்தெடுத்துள்ளார்.

பென்னின் தியாக உள்ளத்தைக் கண்ட பல பெண்கள் தாங்கள் அவரைத் திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளனர். எனினும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

2659 total views