அரண்மனை குறித்த ரகசியங்களை ஆவணப்படமாக எடுக்க பிரித்தானியா ராணி அனுமதி!

Report

பக்கிங்ஹாம் அரண்மனை குறித்த ரகசியங்களை ஆவணப்படமாக எடுக்க பிரித்தானியா ராணி அனுமதி அளித்துள்ளார்.

ராயல் அரண்மனையில் ரகசியங்கள் என்ற தலைப்பில் செப்டம்பர் 25ம் திகதி புதன்கிழமை இரவு 9 மணிக்கு சேனல் 5-ல் இந்த தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடர் நான்கு அத்தியாயமாக எடுக்கப்பட்டு வருகிறது.

முதல் அத்தியாயத்தில் பக்கிங்ஹாம் அரண்மனை குறித்த ரகசியங்கள் வெளியாகவுள்ளது. அதில் சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளது, அதாவது அரண்மனையில் ராணிக்கு என தனியாக ஒரு பண இயந்திரம் இருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ராணி ஒருபோதும் பணத்தை எடுத்துச் செல்லமாட்டார் என்று கூறப்பட்டாலும், ராயல்களால் விருப்பமான வங்கியான Coutts, பக்கிங்ஹாம் அரண்மனையில் ஏடிஎம் ஒன்றை நிறுவியிருப்பதாக நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது. ஆனால், ராணி இதை எப்போதாவது பயன்படுத்தியிருக்கிறாரா என்பதை வெளிப்படுத்தவில்லை.

Windsor Castle, Balmoral மற்றும் Clarence House என அனைத்து அரச அரண்மனைகளையும் பற்றிய புதிய விவரங்களுடன் ஆவணப்படம் வெளியாகிறது.

இத்தொடர் அரச ஆய்வாளர்கள், முன்னாள் பத்திரிகை அதிகாரிகள், சமூக வடிவமைப்பாளர் Nicky Haslam மற்றும் முன்னாள் சேவகர்கள் Charles மற்றும் Camilla, Grant Harrold ஆகியோரின் பங்களிப்புகளைக் கொண்டுள்ளது.

1703 ஆம் ஆண்டில் Duke of Buckingham என்பவரால் கட்டப்பட்ட அரண்மனை, பின்னர் 775 அறைகள், 52 படுக்கையறைகள் மற்றும் 78 குளியலறைகள் என விரிவுபட்டுத்தப்பட்டுள்ளன. ராணி மற்றும் இளவரசர் பிலிப்பை கவனிக்கும் 188 ராயல் சேவகர்களால் இது நிர்வகிக்கப்படுகிறது.

ராணி அதை தனது அலுவலகம் என்றும் விவரிக்கிறார். அரண்மனையின் ஆடம்பரம் புகழ்பெற்ற ballroom-ன் உச்சவரம்பு மூன்று டபுள் டெக்கர் பேருந்துகளின் உயரம் ஆகும்.

அரண்மனையில் அவசர சிகிச்சை நடவடிக்கைகளை செய்யக்கூடிய மருத்துவரின் அறுவை சிகிச்சை அறையுடன்பணியாளர் தபால் அலுவலகமும் உள்ளது.

ஊழியர்கள் நீச்சல் குளத்தையும் பயன்படுத்தலாம் என ராணியின் முன்னாள் பத்திரிகை அதிகாரி Dickie Arbiter வெளிப்படுயுள்ளார். மேலும், அங்கு பணிபுரியும் போது எப்போதாவது நீராடுவேன் என்று கூறினார்.

அரண்மனையில் ஒரு பார் இருந்தது, ஆனால் சில ஊழியர்களால் அது மூடப்பட்டது என்று Arbiter கூறினார்.

அரண்மனை விழாவின் போது நடிகர்கள் ச Sir Ian McKellen, Dame Helen Mirren ஆகியோர் சிம்மாசனம் அறையை எவ்வாறு கண்டுபிடித்தார்கள் என்பதையும் இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது.

1162 total views