பிரித்தானியாவில் பொய்யான தகவலை அளித்த கர்ப்பிணி தாயாருக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை!

Report

பிரித்தானியாவில் பிறந்த பிள்ளையின் தந்தை தொடர்பில் பொய் தகவல் அளித்த கர்ப்பிணி தாயாருக்கு 8 மாத சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வேல்ஸில் உள்ள ஸ்வான்சீ நகரில் குடியிருக்கும் 30 வயதான லூயிஸ் பாய்ஸ் என்பவரே தமது பிள்ளை தொடர்பில் பொய்யான தகவலை பதிவு செய்ய முயன்று சிறை தண்டனைக்கு உள்ளானவர்.

இவர் தமக்கு பிறந்த பிள்ளை மற்றும் தமது புதிய காதலனுடன் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ய சென்றுள்ளனர்.

அங்குள்ள அதிகாரிகளிடன் பிள்ளையின் பெற்றோர் தாங்கள் எனவும் கூறியுள்ளனர். அப்போது குறித்த பெண்மணியின் காதலனான Nathan Leggatt என்பவர் கண்கலங்கி, பிள்ளையின் பிறப்பு குறித்து பதிவு செய்வது என்பது உண்மையில் உணர்வு பூர்வமானது என கூறியுள்ளார்.

இந்த விவகாரம் அங்குள்ள அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, இருவரையும் தனித்தனியாக விசாரித்துள்ளனர்.

இதில் இருவரும் முரணான தகவல்களை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த பிள்ளையின் தந்தை யார் என்பது தொடர்பில் மருத்துவ சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் லூயிஸ் பாய்ஸ் தமது முன்னாள் காதலருக்கு பிறந்த பிள்ளையை, தமது புதிய காதலரின் பிள்ளை என பொய் கூறியது அம்பலமானது.

இந்த விவகாரம் தொடர்பில் பொய் தகவல் கூறிய லூயிஸ் பாய்ஸ் மற்றும் அவரது புதிய காதலர் Nathan Leggatt ஆகிய இருவருக்கும் தலா 8 மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து ஸ்வான்சீ கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கும் லூயிஸ் பாய்ஸ் மிக விரைவில் சிறை தண்டனை அனுபவிக்க உள்ளார்.

850 total views