தோமஸ் குக்கின் 555 நிறுவனங்களை பொறுபேற்ற ஹேய்ஸ் ட்ரவல்

Report

அண்மையில் பெரும் பொருளாதார முடக்கத்திற்கு உள்ளான தோமஸ் குக் விமானநிறுவனத்தின் 555 நிறுவனங்களை அதன் போட்டி நிறுவனமான ஹேய்ஸ் ட்ரவல் பொறுபேற்றுள்ளது.

2,500 க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த மாதம் தோமஸ் குக் நிறுவனம் சரிந்தபோது நியமிக்கப்பட்ட உத்தியோகபூர்வ பெறுநரிடமிருந்து சுயாதீன பயண முகவர் கடைகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

அதேவேளை. தோமஸ் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்கள் 421 பேரை ஹேய்ஸ் ட்ரவல் நிறுவனம் ஏற்கனவே பணியில் இணைத்துள்ளது.

அதன்படி ஆயிரக்கணக்கான பணியாளர்களின் வேலைவாய்ப்பை அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் பாதுகாக்கும் என நம்பப்படுகின்றது.

இதேவேளை ,தோமஸ் குக் விமானநிறுவனத்தின் அனைத்து வர்த்தக நிலையங்களையும் விரைவில் திறக்க எண்ணியுள்ளதாக ஹேய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1072 total views