நேரலை நிகழ்ச்சியில் ஜோடி ஒன்றின் முகம் சுழிக்கவைக்கும் செயல்!

Report

ராக்கின் ஈவ் (Rockin‘ Eve) நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்படும் .

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற மக்கள் அதிக ஆர்வம் காண்பிப்பார்கள். பல ஆயிரம் மக்கள் ஒரே இடத்தில் கூடி நிகழ்ச்சியை கண்டு களித்தவாறு புத்தாண்டை வரவேற்பது வழக்கம்.

அந்தவகையில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற டிக் கிளார்க்கின் புத்தாண்டு ராக்கின் ஈவ் நிகழ்வின் போது ஒரு ஜோடி ஹம்பிங் செய்யும் வீடியோ ABC சேனலின் நேரடி ஒளிபரப்பானது.

இந்நிலையில் அந்த ஒரு குறிப்பிட்ட காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிகழ்ச்சியை ABC சேனலின் தொகுப்பாளர் நேரலையில் தொகுத்து வழங்கினார்.

அப்போது, அவருக்கு பின்புறமாக நின்று கொண்டிருந்த ஒரு ஜோடி மிகவும் ஜாலியாக ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்றிருந்தமை பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு தரப்பினர் அவர்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதில் சிலர் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டாலும், மிகவும் ஆர்வமாக இந்த வீடியோவை பலரும் பார்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3965 total views