பிரித்தானியாவில் லொறியிலிருந்து மீட்கப்பட்ட 39 சடலங்களின் பெயர்கள் வெளியானது!

Report

பிரித்தானியாவின் எசெக்ஸ் நகரில் லொறியில் சிக்கிய 39 சடலங்களின் பெயர் விபரங்களை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

எசெக்ஸ் நகரில் குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றில் 39 சடலங்கள் சிக்கிய விவகாரத்தில், நீண்ட 16 நாட்களுக்கு பின்னர் முதன் முறையாக பொலிசார், அந்த 39 பேரின் பெயர் மற்றும் வயது உட்பட முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த கொடூர மரணத்திற்கு இரையான அனைவரும் வியட்நாம் நாட்டவர்கள் என பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர்களில் 10 பேர் இளைஞர்கள் எனவும், 31 பேர் வியட்நாமின் Ha Tinh பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதில் Nguyen Huy Hung மற்றும் Dinh Dinh Binh ஆகிய இருவரும் வெறும் 15 வயதேயான இளைஞர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையானது மிகவும் சிக்கலான ஒன்று என தெளிவுப்படுத்திய அதிகாரிகள் தரப்பு,

உற்றார் உறவினர்களை இழந்து பரிதவிப்பில் இருக்கும் குடும்பத்தினருக்கு உறுதியான தகவலை அளிக்க வேண்டியது தங்களின் கடமை எனவும், அதை நிறைவேற்ற உறுதியுடனும் முனைப்புடனும் போராடியதாக தெரிவித்துள்ளனர்.

2731 total views