பிரிட்டனின் இளவரசி மேகனிற்கு வாக்குரிமை இல்லை!

Report

பிரிட்டனின் இளவரசி மேகன் மார்க்கலுக்கு இதுவரை அந்நாட்டுக் குடியுரிமை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த இளவரசி மார்க்கல் எலிசபெத் அரசியாரின் பேரனாகிய ஹாரியை மணமுடித்து ஒன்றரை ஆண்டுகளாகிவிட்டபோதும் அவருக்கு இன்னும் பிரிட்டிஷ் குடியுரிமை வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

இத்தகவலை இளவரசியின் நண்பர் கூறிய இத்தகவலை DailyMail வெளியிட்டுள்ளது.

DailyMail தகவல்படி, மார்க்கல் ஈராண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷ் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்.

எனினும் , குடியுரிமை விண்ணப்பம் மெதுவாகவே பரிசீலிக்கப்படும் என்பதை இளவரசி மார்க்கல் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவருடைய நண்பர் சொல்லியிருக்கிறார்.

இதேவேளை குடியுரிமை இல்லாததன் காரணமாக பொதுத் தேர்தலில் மார்க்கலால் வாக்களிக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

1259 total views