ட்ரம்பை அவமானப்படுத்திய பிரிட்டன் இளவரசி! வைரலாகும் வீடியோ

Report

பிரிட்டனின் இளவரசி அன்னே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை வாழ்த்தத் தவறியதைக் காட்டும் வீடியோ இணையத்தில் வைலராகி வருகின்றது.

கடந்த செவ்வாய் இரவு நேட்டோ (NATO) தலைவர்களுகாக இரண்டாம் எலிசபெத் மகாராணி நடத்திய பக்கிக்ஹாம் அரண்மனை வரவேற்பறையில் இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.

ராணியும் அவரது ஒரே மகள் இளவரசி அன்னேவுக்கும் இடையே இந்த மெளனமான விவாதம் நடக்கிறது.

அந்த வீடியோவில் ராணி, அவரது மகன் இளவரசர் சார்லஸ் மற்றும் கமிலா ஆகியோருடன் டொனால்ட் மற்றும் மெலனியா ட்ரம்பை வரவேற்கின்றனர்.

எக்ஸ்பிரஸ் நியூஸ் படி, இளவரசி அன்னே பக்கிக்ஹாம் அரண்மனையின் அதிகாரப்பூர்வ அறைக்குள் நுழைய காத்திருக்கும்போது அரச குடும்த்தினர் ட்ரம்பை வரவேற்கின்றனர்.

இந்நிலையில் ட்ரம்பினை வாழ்த்திய பிறகு, ராணி தனது மகளைப் பார்த்து சைகையில் டொனால்ட் மற்றும் மெலனியா ட்ரம்பை வரவேற்க எலிசபெத் மகாராணி கூப்பிடுகின்றார்.

எனினும் அதனை கண்டுகொள்ளாமல் அன்னே இரண்டு கைகளையும் தூக்கி அதனால் என்ன என்பது போல் வரவேற்க மறுக்கிறார்.

இதேவேளை வீடியோ ட்விட்டரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டதுடன் ஆயிரக்கணக்கில் கமெண்டுகளையும் பெற்றுள்ளது.

13948 total views