புதிய சட்டத்தை நிறைவேற்ற தயாராகும் பிரதமர் போரிஸ் ஜோன்சன்

Report

பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேறியதும் முதல் வேலையாக தொழில்முறைத் தேர்ச்சியற்ற புலம்பெயர்ந்தவர்கள் பிரிட்டனுக்குக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற பிரதமர் போரிஸ் ஜோன்சன் தயாராகி வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இதற்குரிய திட்டங்களை பிரதமரின் உதவியாளர்கள் வகுத்து வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்குப் பின்னரான பிரிட்டனின் குடியேற்ற திட்டங்களை புதிய சட்டம் மிகக் கடினமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திறமை வாய்ந்த தொழிலாளர்கள் தவிர அகதிகள் உள்ளிட்ட குடியேறிகள் பிரெக்ஸிட்டுக்குப் பின்னர் பிரிட்டனில் தஞ்சம் கோரும்போது அவை பெரும்பாலும் நிராகரிக்கப்படலாம் எனவும் கருதப்படுகிறது.

இதேவேளை, பிரிட்டனின் எதிர்கால குடியேற்ற முறை குறித்த முன்மொழிவுகளை உள்துறை செயலாளர் பிரிதி படேல் இந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றதாக ரெலிகிராப் தெரிவித்துள்ளது.

2361 total views