லண்டன் மசூதியில் கத்தி குத்து! சந்தேக நபர் கைது

Report

லண்டன் மசூதியில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தினை தொடர்ந்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , குறித்த சம்பவம் பயங்கரவாத செயலாக இருக்க வாய்ப்பில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சம்பவத்தில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை எனினும், 70 வயதுடைய நபர் ஒருவர் காயங்களுக்குள்ளான 2நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த நபர் மசூதியில் இடம்பெறும் பிரார்த்தனைகளுக்கு அழைப்பு விடுபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு பிரார்த்தனை இடம்பெற்றுக்கொண்டிருந்து வேளை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் , உடனடியாக பிரார்த்தனைகளை நிறுத்திய வழிப்பாட்டாளர்கள் சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அத்துடன் இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இம் மாதிரியான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருக்க பொலிஸார் விழிப்புடன் இருக்கவேண்டுமென வழிப்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ள நிலையில் ,சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1962 total views