15 நிமிடங்கள் தாமதாக புறப்பட்ட பிரித்தானிய விமானம்... இத்தாலிக்கு போக பயமாக இருக்கிறது! பீதியில் பயணிகள் சிலர்

Report

இத்தாலி செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று புறப்பட சிறிது நேரமே இருக்கும் நிலையில், பயணிகள் சிலர் இத்தாலிக்கு செல்ல பயமாக இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.

இத்தாலியில் நான்காவது நோயாளி கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

84 வயது முதியவர் ஒருவர் வட இத்தாலியில் உள்ள Lombardyயில் இன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை நான்காகியுள்ளது.

ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து மிலன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தாமதாகியுள்ளது என செய்தியாளர் ஒருவர் ட்வீட் ஒன்றை வெளியிட்டார்.

சில பயணிகள் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இத்தாலிக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறியதாக விமானி அறிவித்ததைத் தொடர்ந்து விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

ஒரு பயணி இறுதி நேரத்தில் விமானம் ஏற மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, விமானம் 15 நிமிடங்கள் தாமதாக புறப்பட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

4436 total views