மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டேன் - பிரபல பாடகி வெளியிட்ட பகீர் தகவல்!

Report

கிராமி விருது பெற்ற பிரபல பாடகி டஃபி , தான் மயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டு, சில நாட்கள் அடைத்து வைக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாடகி டஃபி(35) கிராமி விருது பெற்றவர். அவரை ஆளையே காணவில்லை என்று ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்க அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

அந்த போஸ்ட்டில் அவர் கூறியிருப்பதாவது, இதை எப்படி எழுதுவது என்று நான் பல முறை யோசித்துள்ளேன். தற்போது ஏன் எழுதுகிறேன் என்பது தெரியவில்லை.

எனக்கு என்ன ஆகிவிட்டது, நான் ஏன் திடீர் என்று காணாமல் போய்விட்டேன் என்று பலர் வியந்திருக்கலாம்.

ஒரு செய்தியாளர் என்னை தொடர்பு கொண்டார். அவர் எப்படியோ என்னை தொடர்பு கொள்ள, கடந்த கோடைக்கு பிறகு நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டேன்.

ஒரு வழியாக பேசியது நன்றாக இருந்தது. நான் தற்போது நன்றாக இருக்கிறேன். மயக்க மருந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சில நாட்கள் அடைத்து வைக்கப்பட்டேன்.

அதையும் தாண்டி வந்துவிட்டேன். அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வர நேரம் எடுத்தது.

நான் ஏன் என் வலியை என் குரல் மூலம் வெளிப்படுத்த முயற்சிக்கவில்லை என்று நீங்கள் வியக்கலாம். என் கண்களில் இருந்த சோகத்தை யாருக்கும் காட்ட விரும்பவில்லை.

இதயம் நொறுங்கியபோது எப்படி பாட முடியும் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். பின்பு மெதுவாக என் இதயம் சரியானது.

விரைவில் நான் பேட்டி அளிக்கிறேன். உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் பதில் அளிக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக அன்பாக இருப்பதற்கு நன்றி என டஃபி தெரிவித்துள்ளார் .

டஃபியின் முதல் ஆல்பமான ராக்ஃபெரிக்கு 3 ப்ரிட் விருதுகள் மற்றும் ஒரு கிராமி கிடைத்ததன் மூலம் அவர் பிரபலமானமை குறிப்பிடத்தக்கது.

டஃபியின் மெர்சி பாடல் 2008ம் ஆண்டு இங்கிலாந்தில் மூன்றாவது பெரிய ஹிட்டான பாடல் ஆகும். இத்தனை நாட்களாக டஃபிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் இருந்த ரசிகர்கள் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

2909 total views