இவரிடமிருந்து தான் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ்க்கு கொரோனா பரவியாதா? வெளியான புகைப்படம்!

Report

இளவரசர் சார்லஸிற்கு கொரோனா வைரஸ் பரப்பியது, பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் தான் என்று சமூகவலைத்தளங்கள் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், அது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது வரை பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,529-ஆக இருக்கும் நிலையில், 465 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மூன்று வாரங்கள் முடக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

இதையடுத்து நேற்று, இளவரசர் சார்லஸிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அவர் சீரான நிலையில், இருக்கிறார், அவருக்கு இந்த வைரஸ் யாரிடமிருந்து பரவியது என்பது கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் பிரித்தானியாவில் இருந்து திரும்பியவரும், கொரோனா வைரஸ் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவருமான இந்தியாவை சேர்ந்த பிரபல பாலிவுட் பாடகியான Kanika Kapoor-யிடம் இருந்து தான் பரவியிருக்கிறது என்று கூறி, அவர் சார்லஸிற்கு கை குலுக்கிய மற்றும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்த புகைப்படங்களை இணையவாசிகள் வைரலாக்கினர்.

ஆனால் அந்த புகைப்படங்கள் எல்லாம் பழையவை, 2015 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் இருவரும் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் என்பது தெரியவந்துள்ளது.

அதில், ஆரஞ்சு நிறத்தில் உடையணிந்திருக்கும் Kanika Kapoor, இளவரசர் சார்லஸிடம் பேசுகிறார். இது 2015-ஆம் ஆண்டு Elephant Family charity நடத்திய Travels to my Elephants நிகழ்ச்சியில் நடந்தது எனவும், மற்றொன்றில் இளவரசருக்கு கை கொடுப்பது போன்று இருக்கும் புகைப்படம் 2018-ஆம் ஆண்டு லண்டனில் இருக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையில் அவரை சந்தித்த போது எடுத்த புகைப்படம் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் இந்த புகைப்படங்கள் சமீபத்தில் எடுக்கப்பட்டவை அல்ல, ஒரு தகவலை பரப்புவதற்கு முன்பு அதன் உண்மையை தெரிந்து கொண்டு மக்கள், பதிவிறக்கமோ அல்லது பரப்பவோ செய்ய வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

5394 total views