தந்தையை பார்க்க பிரித்தானியாவுக்கு செல்லக்கூடாது... ஹரிக்கு மேகன் விதித்துள்ள தடை!

Report
176Shares

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையிலும், அவரை சந்திப்பதற்காகக்கூட பிரித்தானியாவுக்கு செல்லக்கூடாது என தனது கணவர் ஹரிக்கு மேகன் தடைவிதித்துள்ளதாக பிரபல பிரித்தானிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

செவ்வாயன்று பிரித்தானிய இளவரசர் சார்லஸ் (71)கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்காட்லாந்திலுள்ள பால்மோரல் எஸ்டேட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட்டை சந்தித்து இரண்டு வாரங்கள் ஆன நிலையில், இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட்டுக்கு கொரோனா தொற்று இருப்பது ஐந்து நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்ன சூழ்நிலையானாலும் சரி, இப்போதைக்கு ஹரி எந்த இடத்துக்கும் பயணம் செய்வதில் தனக்கு உடன்பாடில்லை என்று ஹரியிடம் மேகன் தெரிவித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹரி தன் தந்தையுடன் தொடர்பிலிருப்பதாக தெரிவித்துள்ள மேகன், தந்தையின் நிலை அறிந்து அவர் மிகவும் விரக்தியடைந்துள்ளதாகவும், சொல்லப்போனால், மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட இருவருமே இப்போது எதுவும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டிருப்பதையடுத்து விரக்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹரி கடைசியாக தன் தந்தையை பார்த்தது, இம்மாத துவக்கத்தில் காமன்வெல்த் கூட்டத்தின்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவி வரும் நிலையில், ஹரியும் மேகனும் தற்போது கனடாவின் வான்கூவர் தீவிலுள்ள தங்கள் வீட்டில் தங்கள் மகன் ஆர்ச்சியுடன் பாதுகாப்பாக தங்கியுள்ளார்கள்.

அவர்களிடம் பணி செய்வோர் கைகளில் கையுறைகளுடன், கடும் சுகாதாரக் கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

5756 total views