குப்பை போடும் கவர்களை அணிந்துகொண்ட செவிலியர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று!

Report

போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் குப்பை போட பயன்படுத்தும் கவர்களை அணிந்துகொண்ட செவிலியர்கள் குறித்த செய்தி நினைவிருக்கலாம்!

அவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் Harrowவிலுள்ள Northwick Park மருத்துவமனையில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் குப்பை போட பயன்படுத்தும் கவர்களை அணிந்துகொண்டு வேலை செய்யவேண்டிய சூழல் அங்குள்ள மருத்துவ பணியாளர்களுக்கு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் இந்த மூன்று செவிலியர்களும் குப்பை போட பயன்படுத்தும் கவர்களை அணிந்துகொண்டு போஸ் கொடுத்தனர்.

அந்த மூன்று செவிலியர்களுக்கும் சென்ற வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மூத்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பணியாற்றும் மருத்துவமனையின் ஒரு வார்டில் பணியாற்றும் ஊழியர்களில் பாதிக்கும் மேலானோருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், மருத்துவமனை நிர்வாகிகள் சரியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

3895 total views