வேல்ஸில் கொரோனாவால் உயிரிழந்த இரட்டை சகோதரிகள்... தீவிர சிகிச்சையில் சகோதரர்!

Report

வேல்ஸில் இரட்டை சகோதரிகள் நான்கு நாட்கள் இடைவெளியில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்த சம்பவம் அந்த குடும்பத்தை மொத்தமாக உலுக்கியுள்ளது.

வேல்ஸில் குடியிருக்கும் 66 வயதான எலினோர் ஆண்ட்ரூஸ் மற்றும் எலைன் ஆகிய இருவருமே கொரோனாவால் நான்கு நாட்கள் இடைவெளியில் மரணமடைந்தவர்கள்.

இருவரும் அனைத்து விடயங்களிலும் ஒருமித்த கருத்துடனே இயங்கி வந்ததாகவும், இறுதியில் இருவரும் கொரோனாவுக்கு அடிபணிந்ததாகவும் அவர்களது பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

எலினோர் தான் முதலில் கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதாகவும், அது எலைனுக்கும் தொற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இருவரும் வயது மூப்பு காரணமாக ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். ஆடம்பரமான இறுதிச்சடங்கு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில்,

தற்போது வெறும் 6 பேர்கள் மட்டும் பங்கேற்ற ஒரு சடங்கில் முடித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என குடும்பத்தார் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே எலைனின் சகோதரர் 68 வயதான பிலிப் கொரோனா காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவுகளை மீற வேண்டாம் என கேட்டுக்கொள்ளும் இந்த குடும்பத்தினர், தாங்கள் அனுபவித்த வலியை எவரும் அனுபவிக்க கூடாது என்றே கோருகிறோம் என்கின்றனர்.

2481 total views