லண்டன் பேருந்தில் இளம்பெண்ணிடம் ஆண் பயணி செய்த மோசமான செயல்!

Report

லண்டனில் பேருந்தில் 20 வயது இளம்பெண் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு பின்பக்கம் உட்கார்ந்து கொண்டு அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் தொடர்பான சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

Crayfordல் இருந்து Bluewater செல்லும் பேருந்தில் கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் திகதி 20 வயது பெண் ஏறியுள்ளார்.

அப்போது அதே பேருந்தில் ஏறிய ஆண் பயணி அந்த 20 வயது பெண் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு பின்புறம் உள்ள இருக்கையில் உட்கார்ந்தார்.

பின்னர் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மோசமாக நடந்து கொண்டுள்ளான்.

இதையடுத்து அப்பெண் வேறு இருக்கைக்கு சென்று அமர்ந்த போதும் விடாமல் அவர் பின் இருக்கைக்கு சென்று அமர்ந்து பாலியல் தாக்குதலை அந்த நபர் நடத்தியுள்ளார்.

பெண் பயணி பேருந்தில் இருந்து கீழே இறங்கும் வரையில் இந்த விடயம் தொடர்ந்துள்ளது.

இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இதில் சம்மந்தப்பட்ட நபரின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். பொலிசார் கூறுகையில், இது ஒரு மோசமான சம்பவம், இது தொடர்பாக யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

3174 total views