பிரித்தானியாவில் மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும்? அமைச்சர் வெளியிட்ட தகவல்

Report

பிரித்தானியாவில் ஊரடங்கிற்கு பிறகு பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் மார்ச் 23ம் உரையாற்றிய பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. எனினும், மார்ச் 24ம் திகதி முதல் மூடப்பட்டுள்ள பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

இந்நிலையில், நாட்டில் ஆரம்ப பள்ளிகளை சில மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் மீண்டும் திறக்கும் திட்டத்தில் உறுதியாக இருக்க பிரித்தானியா அரசு விரும்புகிறது என்று போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் பிரித்தானியா அரசாங்கத்தின் இத்திட்டத்திற்கு பிரித்தானியாவில் சில ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

2389 total views