லண்டன் விமான நிலையத்தில் கிடைத்த பல கோடிகள் மதிப்பிலான போதை பொருட்கள்! வெளியான புகைப்படங்கள்

Report

லண்டன் Heathrow விமான நிலையத்தில் £8.5 மில்லியன் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கொரோனா லாக்டவுன் சமயத்திலும் நாட்டுக்குள் போதைப்பொருட்களை கடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சத்தால் பிரித்தானியாவில் ஒரு சில விமானங்கள் மட்டுமே தினமும் வந்து செல்லும் நிலையில், அது போதைப்பொருள் கடத்தலுக்கான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

அதன்படி கடந்த 21ஆம் திகதி Heathrow விமான நிலையத்தில் பழங்கள் மற்றும் nuts கொட்டைகள் பெட்டிகள் அருகில் £8.5 மில்லியன் மதிப்புள்ள ஹெராயின் போதை மருந்துகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

போதை மருந்து கடத்தல் சம்மந்தமாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பொலிசார் கைது செய்து விசாரணைக்கு கீழ் விடுவித்துள்ளனர்.

இது குறித்து அமைச்சர் கிறிஸ் பிலிப் கூறுகையில், சட்டவிரோத போதை மருந்துகள் கடத்தலானது நமது சமூகங்களை அடைவதைத் தடுப்பதற்கான எங்கள் பணி மிகவும் முக்கியமானது என கூறியுள்ளார்.

1665 total views