பிரித்தானியாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கென்ட் கோட்டை அருகே கல்லால் அடிபட்டு இறந்த நபர்: நீடிக்கும் மர்மம்!

Report

பிரித்தானியாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கென்ட் கோட்டை அருகே நடைபயிற்சியில் ஈடுபட்ட ஒருவர் கல்லால் அடிபட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த நபருக்கு சுமார் 70 வயதிருக்கும் எனவும், தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினரால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது எனவும் கூறப்படுகிறது.

கென்ட் கோட்டை என அறியப்படும் ஐன்ஸ்ஃபோர்டில் உள்ள லல்லிங்ஸ்டோன் கோட்டையின் தரைத்தளத்திலேயே குறித்த சம்பவம் வியாழனன்று மாலை சுமார் 5 மணியளவில் அரங்கேறியுள்ளது.

கோட்டையின் ஒருபகுதியில் இருந்து கற்களை வீசியுள்ள நிலையில், அந்த பாதை வழியாக கடந்து சென்ற அந்த 70 வயது நபர் இதில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது ஆயுத பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள மீனவர் ஒருவரை உள்ளூர் வேட்டையாடும் இளைஞர்கள் குழு ஒன்று அணுகிய நிலையில், அவர்களுக்கிடையே ஏற்பட்ட ஏற்பட்ட பிரச்சனையை சமாளிக்க கற்களை வீசியிருக்கலாம் என ஒருதரப்பு தெரிவித்துள்ளது.

1497-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த லல்லிங்ஸ்டோன் கோட்டையானது ஒரு காலத்தில் பிரபுக்கள் வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்டது.

மட்டுமின்றி லல்லிங்ஸ்டோன் கோட்டையானது 20 தலைமுறைகளாக Hart-Dyke குடும்பத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

1192 total views