கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்ற உலகின் வயதான நபர் பிரித்தானியாவில் உயிரிழப்பு!

Report

உலகின் வயதான மனிதர் என கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்ற பிரித்தானியாவை சேர்ந்த பாப் வெய்டன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த112 வயதானவர், பாப் வெய்டன். இவர் உலகின் வயதான நபராக பிறப்பு சான்றிதழ்படி அறியப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் அவர் உலகின் வயதான நபரான நபர் என்று கின்னஸ் சாதனையில் இடம்பெற்றார்.

இந்த நிலையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பாப் வெய்டன் உயிரிழந்ததாக அவர்களது குடும்பத்தினர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்களது உறவினர்கள் தரப்பில், பாப் வெய்டன் இறந்துவிட்டார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

அவர் எங்களுக்கெல்லாம் உதாரணமாக இருந்தார். அவர் அரசியல், சுற்றுச் சூழல் அனைத்திலும் ஆர்வமாக இருந்தார். நட்பாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாப் வெய்டன் வடக்கு பிரித்தானியாவில் மார்ச் மாதம் 29 ஆம் திகதி , 1908 ஆம் ஆண்டு பிறந்தார். பாப் வெய்டனுக்கு 7 குழந்தைகள் உள்ளனர்.

இதற்கு முன்னர் உலகின் வயதான மனிதர் என்ற பட்டம் ஜப்பானை சேர்ந்த சிடேட்சு என்பவரிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

1258 total views