ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்!

Report

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த பிரித்தானியா 'சரியான நடவடிக்கைகளை' எடுத்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

பிரத்தானியா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அராசங்கம் அவசரப்படுவதாக நாட்டின் முக்கிய விஞ்ஞானிகள் எச்சரித்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கை கவனமாக தளர்த்துவது இப்போது எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கை வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் கூறினார்.

மேலும் மக்களை சமூக தொடர்பு கொள்ள அனுமதிக்கும் வகையில் அரசாங்கம் அவசரப்படுவதாக எழுந்த விமர்சனங்களை டொமினிக் ராப் புறந்தள்ளி உள்ளார்.

இந்த நேரத்தில் இக்கணத்தில் எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கை இது என்று நாங்கள் நம்புகிறோம் என்று ராப் கூறினார்.

நாங்கள் அந்த நடவடிக்கைகளை மிகவும் கவனமாக எடுத்து வருகிறோம், அறிவியலை அடிப்படையாகக் கொண்டது, அதேசமயம் இப்போது வைரஸைக் கண்காணிக்கும் நமது திறனை அடிப்படையாகக் கொண்டது என விளக்கமளித்துள்ளார்.

1369 total views