பிரித்தானியாவின் பிரபல சுற்றுலாத்தலம் ஒன்றில் 200 அடி உயரத்திலிருந்து கடலில் குதித்த நபருக்கு நேர்ந்த விபரீதம்!

Report

பிரித்தானியாவின் பிரபல சுற்றுலாத்தலம் ஒன்றில், 200 அடி உயரத்திலிருந்து கடலில் குதித்த ஒருவர் முதுகெலும்பு உடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.

Durdle Door என்னும் இடத்திலிருந்து அந்த நபர் குதிப்பதை பெண் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

முறைப்படியின்றி, தண்ணீரில் குப்புற குதித்துள்ளார் அந்த நபர். அப்பகுதியில் ஆழமும் அதிகமில்லாததால், அவர் விழுந்த வேகத்தில் அவரது முதுகெலும்பு உடைந்துள்ளது.

அருகில் நீந்திக்கொண்டிருந்த சிலர், நிலைமையை உணர்ந்து விரைந்து நீந்திச் சென்று அவரை மீட்டுள்ளனர்.

உடனடியாக அவர் Southampton மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

1333 total views