இங்கிலாந்தில் 10 வார ஊரடங்குக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறப்பு!

Report

இங்கிலாந்தில் 10 வார ஊரடங்குக்கு பின்னர் இன்று தொடக்க பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு முதலில் வெப்பநிலையை பரிசோதித்த பின்னர் கைகளை நன்றாக கழுவிய பின்னருமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

ஒரு வகுப்பறையில் 15 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் வகுப்பறைக்குள் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்திருப்பதை ஆசிரியர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பள்ளிக்கு வரவில்லை என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலாம் என்ற அச்சத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் மாணவர்களை சமூக இடைவெளியுடன் நடத்த முடியுமா என்பது கேள்விக்குறியதாகவே இருப்பதாக தலைமை ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்.

854 total views