லண்டனில் சாலையில் சென்ற போது திடீரென சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்!

Report

லண்டனில் சாலையில் சென்ற இளைஞன் திடீரென சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தெற்கு லண்டனில் உள்ள Monarch Paradeல் தான் இந்த சம்பவம் இன்று காலை உள்ளூர் நேரப்படி காலை 7.20 நடந்துள்ளது.

30களில் உள்ள இளைஞர் திடீரென சாலையில் சுருண்டு விழுந்ததாக அவசர உதவி எண்ணுக்கு போன் வந்தது.

இதையடுத்து லண்டன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இளைஞனை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக அவரை காப்பாற்ற முடியவில்லை.

அவரின் மரணத்துக்கு இன்னும் காரணம் தெரியாத நிலையில் இது விவரிக்கப்படாத மரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இளைஞனின் உயிரிழப்பு குறித்து அவரின் உறவினருக்கு தகவல் தரப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும், விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5489 total views