இங்கிலாந்தில் முகக்கவசம் அணியாமல் கடைகளுக்கு வருபவர்களுக்கு அபராதம்! எவ்வளவு தெரியுமா?

Report

இங்கிலாந்தில் கடைகளுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால், சுமார் 100 பவுண்டுகள் அபராதம் விதித்து இங்கிலாந்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக மக்கள் வெளியே வரும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம். அதே போல் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தில் கடைகளுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் இல்லையென்றால் 100 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் 14 நாட்களுக்குள் அபராதத் தொகை செலுத்துபவர்களுக்கு கட்டணம் குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

வரும் 24ம் திகதி முதல் இந்த உத்தரவுக்கு நடைமுறைக்கு வருகிறது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதோடு கடை ஊழியர்கள் மற்றும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

இதற்கு முன்னதாக, இங்கிலாந்தில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது மட்டுமே முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

எனினும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முகக்கவசம் பயன்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இங்கிலாந்து பின்தங்கியிருப்பதாக பலரும் குற்றஞ்சாட்டி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

5404 total views