கடலில் மூழ்கிய பிள்ளைகளை துணிந்து மீட்ட தந்தை! உயிரிழக்கும் முன் கடைசியாக செய்த நம்பமுடியாத செயல்!

Report

பிரித்தானியாவில் கடலில் மூழ்கிய தனது பிள்ளைகளை துணிந்து மீட்ட தந்தை, தான் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

பிரித்தானியாவின் Shropshireஐச் சேர்ந்த Jonathan 'Joff' Stevens (36), தனது பிள்ளைகளுடன் கடற்கரைக்கு சென்றுள்ளார். Jonathanஇன் பிள்ளைகளான Lacey (12) மற்றும் Jack (10) இருவரும் கடலில் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது, திடீரென வந்த ராட்சத அலை ஒன்று, பிள்ளைகளை கடலுக்குள் இழுத்துச் செல்வதைக் கண்ட Jonathan, உடனே கடலுக்குள் இறங்கி, பிள்ளைகளை இழுத்துக்கொண்டு வந்து பாதுகாப்பான இடத்துக்கு சேர்த்திருக்கிறார்.

ஆனால், எதிர்பாராமல் வந்த அடுத்த அலை, Jonathanனை இழுத்துச் சென்று விட்டது. கரையிலிருந்த Jonathanஇன் இரண்டாவது மகளான Lauren (11), தன் தந்தை தண்ணீரில் மூழ்குவதைக் கண்டு lifeguardsஇடம் ஓடிச்சென்று, தயவு செய்து என் தந்தையைக் காப்பாற்றுங்கள் என்று கதறியிருக்கிறார்.

அவர்கள் உடனே தண்ணீருக்குள் குதித்து Jonathanஐ கரைக்கு கொண்டுவந்தபோது, அவர் உயிரில்லாததுபோலவே காணப்பட்டாராம்.

ஆனால், அடுத்து நடந்த விடயத்தை தன்னால் நம்பமுடியவில்லை என்கிறாள் Lauren. இறந்ததுபோலவே கிடந்த Jonathan, திடீரென கண்களைத் திறந்து, Laurenஐயும், Joshuaவையும் Laceyயையும் Jackஐயும் ஒருமுறை பார்த்தாராம்.

பார்த்துவிட்டு, ஒரு புன்னகை செய்துவிட்டு, மீண்டும் நினைவிழந்துவிட்டாராம். உடனே அவரை கீழே படுக்கவைத்து முதலுதவி செய்திருக்கிறார்கள் மருத்துவ உதவிக் குழுவினர்.

செயற்கை சுவாசம் கொடுத்து அவரைக் காப்பாற்ற முயன்றும், அவர்களால் Jonathanஐக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கிறது.

அப்பா, தன்னிடம் மிச்சமிருந்த பலம் எல்லாவற்றையும் திரட்டி, தன் கண்களைத் திறந்து, நாங்கள் எல்லாரும் பத்திரமாக இருக்கிறோம் என்பதை உறுதிசெய்துகொண்டு, இனி தான் நிம்மதியாக கண்ணைமூடலாம் என்று எண்ணியிருக்கிறார் போல இருக்கிறது என்கிறாள் Lauren.

சம்பவம் நடந்தபோது அங்கில்லாத பிள்ளைகளின் தாயாகிய Laura Burford, Jonathan பிள்ளைகளை காப்பாற்றிய ஹீரோ என்று புகழாரம் சூட்டுகிறார்.

8476 total views