இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலைகளை திறக்க வலியுறுத்தல்

Report

இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இங்கிலாந்தில் பாடசாலைகள் மூடப்பட்டன.

இந்த நிலையில், தொற்று பரவல் குறைய தொடங்கி உள்ளதால், பாடசாலைகளை இனியும் மூடுவது நல்லதல்ல என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் பாடசாலை கல்வி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர்கள் பாடசாலை கல்வியை தவறவிட்டால் நாடு பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்பொருட்டு கொரோனா பரவல் முற்றிலும் குறையாமல் இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பாடசாலைகளை திறக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுறுத்தியுள்ளார்.

2126 total views