பிரித்தானியாவில் மறைந்திருந்த பதுங்கு குழி ஒன்றில் பொலிஸார் கண்ட அதிர்ச்சி காட்சி!

Report

பிரித்தானியாவில் மறைந்திருந்த பதுங்கு குழி ஒன்றிற்குள் இறங்கிய பொலிஸார் கண்ட காட்சி அவர்களை அதிர வைத்ததுள்ளது.

பிரித்தானியாவின் Skendleby என்ற கிராமத்தில் பண்ணை ஒன்றை சோதனையிட்ட பொலிசார், வைக்கோல் சேமித்து வைக்கும் இடத்தில் ரகசிய வழி இருப்பதைக் கண்டுள்ளனர்.

அந்த திறப்பின் வழியாக இறங்கிய பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

ஆம், பூமிக்கடியில் 12 கண்டெய்னர்களை இணைத்து பிமாண்ட பதுங்கு குழி ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

அந்த பதுங்கு குழிக்குள், ஏராளம் கஞ்சாவும், 22 குதிரைகள் மற்றும் ஒரு இலாமா என்னும் விலங்கும், ஆறு கார்கள் மற்றும் ஆயுதங்களும் மறைத்து வைக்கப்படிருந்தன. அந்த அளவுக்கு அந்த பதுங்கு குழி பிரமாண்டமாக இருந்தது.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 580,000 பவுண்டுகளாகும். இந்த சம்பவம் தொடர்பாக 34, 35 மற்றும் 28 வயதுடைய மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Matthew McConaughey நடித்த ஜென்டில்மேன் என்னும் ஆங்கிலப்படத்திலும் இதே போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

10903 total views