லண்டனில் 3 பேரை குத்திக் கொலை செய்த குருஜீத் சிங்; நிரபராதி என விடுதலை!

Report

லண்டன் இல்பேட்டில் 3 பேரை கத்தியால் குத்தி கொலை செய்த 30 வயதான குருஜீத் சிங் நிரபராதி என நீதிமன்றம் தீர்பளித்து விடுதலை செய்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் குருஜீத் சிங் கோவிலுக்கு சென்று திரும்பியவேளை, ஹரீந்தர் குமார், நரீந்தர் சிங் மற்றும் பல்ஜித் சிங் ஆகிய மூவரால் இழுத்துச் செல்லப்பட்டார்.

அத்துடன் அவர்கள் மூவரும் இணைந்து குருஜீத் சிங்கை தாக்க முற்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் மூவரையும் கத்தியால் தாக்கி விட்டு குருஜீத் சிங் தப்பிச் சென்றுவிட்டார்.

இந்த தாக்குதலுக்கு காரணம் பண விடையம் என்று கண்டறியப்பட்ட நிலையில். செல்ஃப் டிபென்ஸ் என்று சொல்லப்படும் தற்பாதுகாப்பிற்காகவே குருஜீத் சிங், இவர்களை தாக்கியதாக யூரிகள் தமது முடிவை அறிவித்துள்ளனர்.

அத்துடன் அவர் குற்றமற்றவர் என யூரிகள் கூறியதை அடுத்து நீதிபதி அவரை விடுதலை செய்துள்ளார்.

எனினும் ஆபத்தான கத்தியை அவர் பொது இடத்தில் வைத்திருந்தமைக்காக, பொலிசார் சிலவேளை மேலதிக வழக்கு ஒன்றை போடக் கூடும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

16407 total views