சம்பளம் போதவில்லை; பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா?

Report

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அடுத்த ஆண்டு தன் பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த ஆண்டு தனது பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சம்பளத்தை காரணம் காட்டி போரிஸ் ஜான்சன், அடுத்த ஆண்டு தன் பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிற்கு 150,402 பவுண்ட் சம்பளமாக பெறும் போரிஸ் ஜான்சன், அது தனக்கு போதுமானதாக இல்லை எனவும், அதைக்கொண்டு வாழ முடியாது எனவும் இதன் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர் போரிஸ் ஜான்சன், மாதத்திற்கு 23,000 பவுண்ட் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, போரிஸ் ஜான்சன் அடுத்த ஆண்டு தனது பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரிஸ் ஜான்சனுக்கு ஆறு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களில் சிலர் மிகவும் இளம் வயதினர் என்பதால், நிதி உதவி தேவைப்படுவதாகவும் தனது முன்னாள் மனைவிக்கும் பணம் வழங்க வேண்டிய நிலையில் போரிஸ் ஜான்சன் இருப்பதாகவும் பெயர் வெளியிடாத எம்.பி ஒருவர் கூறியதாக அந்த செய்திகள் கூறுகின்றன.

12600 total views