குழந்தைகளை கொன்றுவிட்டேன்: அவசர உதவிக்கு போன் செய்த அம்மா

Report
666Shares

அமெரிக்காவில் பெற்ற குழந்தைகளை கத்தியால் குத்திக்கொலை செய்த தாய்க்கு 120 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இண்டியானாவை சேர்ந்தவர் ஜேசன். இவர் மனைவி பிரண்டி (31). தம்பதிக்கு டைலர் (7) என்ற மகனும், சார்லி (3) என்ற மகளும் இருந்தனர்.

இந்நிலையில் பிரண்டியுடன் ஏற்பட்ட மனகசப்பால் அவரிடம் விவாகரத்து கோரி ஜேசன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதோடு தனது குழந்தைகளை தன்னுடனே தனியாக அழைத்து செல்லவும் ஜேசன் முடிவெடுத்துள்ளார்.

ஏற்கனவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த பிரண்டி எங்கே தனது குழந்தைகள் தன்னை விட்டு பிரிந்து போய்விடுமோ என அஞ்சியுள்ளார்.

இதையடுத்து ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் இரண்டு குழந்தைகளையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் தன்னுடைய கழுத்தையும் கத்தியால் குத்தி கொண்டு அவசர உதவி எண்ணுக்கு போன் செய்து தனது குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் கத்தியால் குத்தி கொண்டதாக கூறியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த அவசர குழு இரண்டு சடலங்களையும் மீட்டு, பிரண்டியையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

Credit: Brandi Worley/Facebook

இச்சம்பவம் கடந்த 2016-ல் நடந்த நிலையில் பொலிசார் பிரண்டியை கைது செய்து அவர் மீது நீதிமன்ற விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் பிரண்டி மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 120 ஆண்டுகள் சிறை தண்டனை தற்போது விதிக்கப்பட்டுள்ளது.

ஜேசனுக்கும், பிரண்டிக்கும் கடந்தாண்டு மார்ச் மாதமே விவாகரத்து வழங்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

Credit: Shutterstock

21211 total views