திருமணமான 2 மணி நேரத்தில் பரிதாபமாக பலியான இளம்ஜோடி: சோக சம்பவம்

Report

அமெரிக்காவை சேர்ந்த இளம்ஜோடி திருமணம் முடிந்த 2 மணி நேரத்திற்குள் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த வில் பைலெர் என்பவர் தன்னுடைய காதலி பைலீ அகெர்மேனை கடந்த சனிக்கிழமையன்று திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்த கையோடு, புதுமணத் தம்பதியினர் தேனிலவு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி தம்பதியினர் இருவருமே ஹெலிகாப்டரில் தேனிலவிற்க்கு கிளம்பினார்.

உறவினர்கள் அனைவரும் கையசைத்து இருவரையும் வழியனுப்பி வைத்தனர்.

ஹெலிகாப்டர் புறப்பட்ட ஒன்றரை மணி நேரத்திலே மலைப்பகுதியில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் இருந்த வந்த சிக்னலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸ் மட்டும் மருத்துவக்குழு தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தனர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை விபத்தில் அனைவருமே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் அதிகாரபூர்வமாக மணமகளின் குடும்பத்திற்கு அறிவித்தனர். திருமணம் முடிந்த 2 மணி நேரத்திற்குள்ளே புதுமணத்தம்பதியினர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7984 total views