விமானத்தில் வலியால் துடித்த பெண்... கழிவறைக்கு சென்று சோதனை செய்த போது காத்திருந்த அதிர்ச்சி

Report

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண் திடீரென வலியால் துடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது, வியாழக்கிழமை காலை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து அட்லாண்டா செல்லும் விமானத்தில் பயணித்தேன்.

நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்த போது காலில் எதே குத்துவது போல் உணர்ச்சியை உணரத் தொடங்கினேன், தொடர்ந்து குத்திக்கெண்டே இருந்ததால் பயங்கரமாக வலி ஏற்பட்டது, உடனே கழிவறைக்கு சென்றேன்.

அப்போது, உயிருடன் தேள் ஒன்று எனது உடையில் இருந்து வெளியேறியது, இறுதியில் விமான பணிப்பெண்கள் அதை பிடித்தனர் என கூறினார்.

tmz

சம்பவம் குறித்து யுனைடெட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது, சான் பிரான்சிஸ்கோவிலிருந்து அட்லாண்டாவுக்கு பயணித்த விமானத்தில் எங்கள் பயணிகளில் ஒருவரை தேள் கடித்துள்ளது. விமானக்குழுவினர் உடனடியாக முதலுதவி அளித்தனர்.

அட்லாண்டாவில் தரையிறங்கியதும், பாதிக்கப்பட்ட பெண் பயணி உள்ளுர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார் என விமான நிறுவனம் தரப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

11455 total views