கலிபோனியாவில் பாரிய காட்டுத்தீ!

Report
7Shares

கலிபோனியாவில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு காட்டுத்தீ காரணமாக அதனை அண்டியுள்ள செல்வந்தர்கள் வாழும் பகுதியான பெல் எயார் மாளிகைகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

இந்த காட்டுத்தீ காரணமாக துரிதகதியில் 150 ஏக்கர் விஸ்தீரணமான பகுதிகளில் உள்ள மாளிகைகளை பாதித்துள்ளது.

நேற்று இரவு வரை பிரதேசத்தில் உள்ள 12 ஆயிரம் கட்டடங்களுக்கு தீயினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தீயணைக்கும் படைத்தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

அவற்றில் 150 இற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிந்துள்ளன.

பாரிய வலுவைக்கொண்ட காற்று தொடர்ந்தும் வீசுவதால் தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது சிரமமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பிரதேசங்களில் உள்ள மக்களை வெளியேறுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

தற்போது வீசும் கடும் காற்றுக்கு மத்தியில், தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியாது என கலிபோனியாவின் தீயணைக்கும் படையின் தலைவர் கென் பிம்லொட் தெரிவித்துள்ளார்.

ஆகவே, பாதுகாப்பான இடங்களுக்கு குடியிருப்பாளர்களை மாற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, லொஸ் ஏஞ்சலீசில் உள்ள கலிபோனியா பல்கலைக்கழகம் தமது கற்கை நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளது.

தீ பரவி வரும் பிரதேசத்திற்கு வெளியே கல்கலைக் கழகம் அமைந்துள்ள போதிலும், முன்னெச்சரிகை நடவடிக்கைகளாகவே பல்கலைக்கழக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

962 total views