ட்ரம்பின் தீர்மானத்திற்கு அமெரிக்காவின் பாரம்பரிய நட்பு நாடுகள் வரவேற்பு

Report
58Shares

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரிப்பதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்தை, அமெரிக்காவின் பாரம்பரிய நட்பு நாடுகள் வரவேற்றுள்ளன.

டொனால்ட் ட்ரம்பின் இந்த நடவடிக்கையானது நியாயமற்றதும் பொறுப்பற்ற தன்மையையினையும் வெளிப்படுத்தியுள்ளதாக சவுதி அரேபியா கண்டித்துள்ளது.

அதேவேளை, பிருத்தானியாவும், பிரான்சும் இந்த முடிவினை தாம் ஆதரிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

ஆனால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தியாகு, இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவினால் கடைப்பிடிக்கப்பட்ட பல தசாப்த கால கொள்கையினை, தற்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப மாற்றியுள்ளார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டமைக்கு ஜெரூசலம் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி எடுத்த முடிவானது, துரதிஷ்டமானது என கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த செயல்பாட்டிற்கு எதிர்வரும் வியாழக்கிழமை, பாலஸ்தீனியர்கள் பணிநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்ட போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விடயத்தை ஆராய ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அவசர கூட்டம் ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளவுள்ளது.

அழைப்பு விடுக்கப்பட்ட 15 உறுப்பு நாடுகளில் 8 நாடுகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உறுதியளித்துள்ளன.

அரபு லீக்கும் எதிர்வரும் சனிக்கிழமை இந்த விடயம் குறித்து ஆராய உள்ளதாக தெரிவித்துள்ளது.

2446 total views