இலத்திரனியல் சிகரெட் புகைத்தவர் உடல் கருகி உயிரிழப்பு

Report
31Shares

இலத்திரனியல் -சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தவர் திடீரென சிகரெட் வெடித்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் நடந்தது. டால்மேட்ச் எலியா (38) என்பவரே உயிரிழந்தார்.

இரவு படுக்கை அறையில் இருந்தவாறு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த போது சிகரெட் வெடித்துள்ளது. அவரது உடல் 80 சதவீதம் கருகிய நிலையில் இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

படுக்கை அறையில் உடல் கருகி இறந்தது எப்படி, என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. எனவே அவரது உடல் சடலப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

அங்கு நடத்தப்பட்ட சடலப் பரிசோதனையில் இலத்திரனியல் -சிகரெட் பிடிக்க பயன்படுத்தப்படும் குழாயின் கூரியபகுதி அவரது மண்டை ஓட்டுக்குள் பாய்ந்து இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

எனவே, அவர் இ-லத்திரனியல் சிகரெட் புகைக்கும் போது அந்த குழாய் வெடித்து சிதறியதில் படுக்கை அறையில் தீப்பிடித்து அவர் உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

2013 total views