ஹரிகேன் புயல்...அமெரிக்காவின் முக்கிய பகுதிகளை தாக்கும் அபாயம்: மக்களுக்கு எச்சரிகை!

Report

ஹரிகேன் புயல் நெருங்கி வருவதை முன்னிட்டு அமெரிக்காவின் வேர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் அவசரகாலநிலை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பசுபிக் கடலில் ஏற்பட்ட புயல் சூறாவளி புயலாக மாறி அமெரிக்காவின் வேர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதனால் அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்ற நிலையில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில தினங்களில் எந்த நேரத்திலும் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அம்மாகாண ஆளுனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1942 total views