அமெரிக்காவை நெருங்கும் அதிபயங்கர புயல்! 10 லட்சம் பேர் வெளியேற்றம்

Report
52Shares

அமெரிக்காவை அச்சுறுத்தும் அதிபயங்கரமான ஃபுளோரன்ஸ் புயல் சின்னம் அமெரிக்காவை நெருங்கி வருவதாக வானியல் துறை எச்சரித்துள்ளது.

வடக்கு அட்லாண்டிக் கடலில் அதி பயங்கர புயல் உருவாகியுள்ளது. ஃபுளோரன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் புயலானது அதிபயங்கரமானது என அந்நாட்டு தேசிய வானியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் காரணமாக சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த புயலால் இன்னும் சில நாட்களில் அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்கரை பகுதி பலத்த சேதத்தை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 4ஆம் நிலையில் உள்ள இந்த புயல் விரைவில் 5 ஆம் நிலையை எட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கனமழை பெய்து வெள்ள பெருக்கு ஏற்படும் எனவும், மணிக்கு 215 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று அமெரிக்க வானியல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கடல் பகுதியில் 12 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

3170 total views