அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முக்கியஸ்தர் இராஜினாமா

Report

ஐக்கிய நாடுகளின் சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருக்கிறார்.

தூதர் பதவியை ராஜினாமா செய்தது குறித்த முடிவை செவ்வாய்க்கிழமை அறிவித்த நிக்கி ஹாலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகத்தில் உயர் பதவிகளில் இடம்பெற்றிருந்த ஒருவராகத் திகழ்ந்தார்.

அவரது ராஜினாமாவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொண்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டொனால்ட் டிரம்ப்பின் மிக நம்பகமான ஆலோசகர்களில் ஒருவரான நிகி ஹேலி, கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பை சந்தித்தபோது ராஜினாமா குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், வியக்கத்தக்க பணியை ஆற்றியுள்ள நிக்கி ஹாலே சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வேறு பதவிக்குத் திரும்புவார் என்றார்.

மேலும், அவரின் இந்த அறிவிப்பு இரண்டு வருட பணிக் காலத்துக்கு பிறகு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

5847 total views