திருமண உடையில் கல்லறையில் கதறி அழுத பெண்:மனதை உழுக்கிய சம்பவம்!

Report

அமெரிக்காவில் சாலை விபத்தில் கொல்லப்பட்ட காதலனின் கல்லறையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் அன்று திருமண உடையில் இளம்பெண் தேம்பி அழுத சம்பவம் உறவினர்களை கண்கலங்க வைத்துள்ளது.

மேலும் இச்சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி நடந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மது போதையில் இருந்த சாரதியால் ஏற்பட்ட சாலை விபத்தில் 27 வயதான Kendall Murphy என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் இவருக்கும் Jessica Padgett என்ற இளம்பெண்ணுக்கும் இரு குடும்பத்தினரின் ஒப்புதலுடன் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி திருமணம் உறுதி செய்யப்பட்டது.

ஆனால் சாலை விபத்தில் இளைஞர் கெண்டல் மர்பி சிக்கியதால் விமரிசையாக நடைபெறவேண்டிய திருமணம் தடைபெற்றது. இருப்பினும் மனம் தளராத ஜெசிகா விபத்து நடந்து 10 மாதங்கள் கடந்த நிலையில் திருமண உடையில் கல்லறைக்கு சென்று அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

திருமண நாளில் எந்த அளவுக்கு அலங்காரம் செய்து கொள்வார்களோ அதே அளவுக்கு அலங்காரம் செய்து கொண்ட ஜெசிகா, உறவினர்கள் நண்பர்களுடன் கெண்டலின் கல்லறைக்கு சென்றுள்ளார்.

ஜெசிகாவின் இந்த முடிவுக்கு அவரது சகோதரி உறுதுணையாக இருந்துள்ளார். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவில் ஆர்வமுடன் செயல்பட்டு வந்தவர் கெண்டல் மர்பி.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி இன்னொரு தீயணைப்பு மற்றும் மீட்பு குழு உறுப்பினரால் கெண்டல் சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த நபர் தற்போது கொலை வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

11962 total views