அமெரிக்காவின் வாஷிங்டனில் மரண தண்டனைக்கு தடை!

Report

அமெரிக்காவின் மாநிலங்களுள் ஒன்றான வாஷிங்டனில் மரண தண்டனை தடை விதிக்கப்ட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள வாஷிங்டனில் மரண தண்டனை வழங்குவது தடை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

மரண தண்டனையானது தன்னிச்சையாகவும், இன ரீதியிலாகவும் வழங்கப்படுவதாக இது குறித்து உச்சநீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து,அமெரிக்காவில் மரண தண்டனையை நீக்கிய 20வது மாகாணமாக வாஷிங்டன் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் மரண தண்டனையை வழங்கப்பட்டு இருந்த 8 பேரின் தண்டனையை உடனடியாக ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

1106 total views